இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும் : ரயில்வேத் துறை அமைச்சர் அறிவிப்பு !

 

இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும் : ரயில்வேத் துறை அமைச்சர் அறிவிப்பு !

பாராளுமன்றத்தில் குளிர் கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும். இன்று நடைபெற்ற கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில், பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி, நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை ரயில் மூலம் கொண்டு செல்லும் வசதிகள் உள்ளதா? ரயில்களில் இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முடியுமா? ரயிலில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளதா? எதிர்காலத்தில் இத்தகைய சேவையை நிறைவேற்றும் திட்டம் உள்ளதா என்று ரயில்வே துறை அமைச்சரின் கேள்வி எழுப்பியுள்ளார். 

piyush goyal

அதற்குப் பதில் அளித்த ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘ரயில் சேவை மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சைக்காக வேறு இடத்திற்குக் கொண்டு செல்லும் வசதி தற்போதைக்கு இல்லை. ஆனால் இறந்தவர் உடலை ரயில் மூலமாக கொண்டு செல்ல வசதிகள் நீண்டகாலமாகவே இருக்கிறது. விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி ரயில்வே வழியாக இறந்த உடலை கொண்டு செல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

ttn