இறந்தவரின் உடலை பாலத்தில் கட்டி தொங்கவிட்டு ஆற்றுக்குள் தகனம் செய்த மக்கள்!

 

இறந்தவரின் உடலை பாலத்தில் கட்டி தொங்கவிட்டு ஆற்றுக்குள் தகனம் செய்த மக்கள்!

முறையான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை பாலத்திலிருந்து கயிறு கட்டி சடலத்தை ஆற்றுக்குள் இறக்கி தகனம் செய்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

இறந்தவரின் உடலை பாலத்தில் கட்டி தொங்கவிட்டு ஆற்றுக்குள் தகனம் செய்த மக்கள்!

வேலூர் : முறையான சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை பாலத்திலிருந்து கயிறு கட்டி சடலத்தை ஆற்றுக்குள் இறக்கி தகனம் செய்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் காலனி பகுதி மக்களுக்குச் சுடுகாட்டில் போதுமான இடவசதி வேண்டி நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டு வந்தது. அங்கு இறந்தவர்களின் சடலம் அங்குள்ள பாலாற்றங்கரையில் எரியூட்டப்படுவது வழக்கம். ஆனால்  அப்பகுதியிலிருந்த விவசாய நிலங்களை வைத்திருந்தோர் பாலாற்றின் கரைகளை ஒட்டி ஆக்கிரமிப்பு செய்து ஆற்றுக்கு செல்லும் வழியை வேலி அமைத்து அடைத்து விட்டனர். மேலும் சடலங்களை தங்கள் நிலத்தின் வழியே எடுத்து செல்லவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தின் உயிரிழந்தார். ஆனால்  அவரின் சடலத்தை எடுத்துச்செல்ல எதிர்ப்பு கிளம்பியதால் சடலத்தைக் கயிறு கட்டி பாலத்தின் மேல் இருந்து கீழே இறக்கி அங்குள்ள மேடையில் வைத்து எரித்தனர். 

இதுகுறித்து கூறும் அப்பகுதி மக்கள், ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தி இறப்பவர்கள் ஈமச்சடங்கு செய்ய அரசு வழிவகை செய்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.