இறக்குமதி வெங்காயத்தை வாங்க முட்டி மோதியவர்களுக்கு அதிர்ச்சி ! கருப்பாக இருந்ததால் வாங்குவதற்கு தயங்கிய மக்கள் !

இறக்குமதி வெங்காயத்தை வாங்க முட்டி மோதியவர்களுக்கு அதிர்ச்சி ! கருப்பாக இருந்ததால் வாங்குவதற்கு தயங்கிய மக்கள் !

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கருப்பு நிறத்தில் காணப்படுவதால் அவற்றை வாங்க பொதுமக்கள் தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கருப்பு நிறத்தில் காணப்படுவதால் அவற்றை வாங்க பொதுமக்கள் தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வெங்காய விளைச்சல் தட்டுப்பாட்டால் கடுமையாக விலை உயர்ந் நிலையில் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

onion

எகிப்திலிருந்து 6,090 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ளும் வகையில் எம்எம்டிசி நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக 11,000 டன் வெங்காயம் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 30 டன் வெங்காயம் திருச்சிக்கு அனுப்பப்பட்டது.

onion

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் மேல்பாகம் கருப்பாக இருப்பதால், அதனை பொதுமக்கள் வாங்க தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால், வெங்காயத்தின் மேற்புறம்தான் அப்படி இருக்கும் என்றும் மற்றபடி நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று பொதுமக்களுக்கு சொல்லி சொல்லி விற்பனை செய்து வருகின்றனர்

onion

.வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு கிலோ ரூ.120 வரையில் விற்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.