இறக்குமதி மருத்துவ கருவிகள் மீதான சுங்க மற்றும் ஹெல்த் வரிகள் நீக்கம்…. மாஸ்க், வென்டிலேட்டர் விலை குறையும்…

 

இறக்குமதி மருத்துவ கருவிகள் மீதான சுங்க மற்றும் ஹெல்த் வரிகள் நீக்கம்…. மாஸ்க், வென்டிலேட்டர் விலை குறையும்…

மாஸ்க், வென்டிலேட்டர் மற்றும் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் உள்பட இறக்குமதியாகும் மருத்துவ கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் ஹெல்த் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் இவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாரும் எதிர்பாராத வகையில் திடீரென உருவாகி உலகம் முழுவதும் கோர தாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது தொற்று நோயான கொரோனா வைரஸ். நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் நிலவரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கான கருவிகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்

மேலும் மாஸ்க் மற்றும் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், செயற்கை சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்) போன்றவையும் தட்டுபாடு நிலையில் உள்ளது. எனவே உள்நாட்டில் மாஸ்க் மற்றும் இதர மருத்துவ கருவிகளின் தட்டுப்பாட்டை போக்க இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இந்நிலையில், வென்டிலேட்டர், கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள், மாஸ்க் உள்பட இறக்குமதி மருத்துவ கருவிகள் மீதான சுங்க வரி மற்றும் ஹெல்த் செஸ் ஆகியவற்றை வரும் செப்டம்பர் மாதம் வரை நீக்கியுள்ளது. 

மாஸ்க்

மேலும் இந்த கருவிகள் தயாரிப்புக்கு பயன்படும் பொருட்களின் இறக்குமதிக்கும் இந்த வரிகள் நீக்கம் பொருந்தும். இந்த வரிகள் நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் இந்த மருத்துவ கருவிகள் தாரளமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், வரிகள் நீக்கத்தால் மாஸ்க் உள்ளிட்ட இறக்குமதி மருத்துவ கருவிகள் விலை குறையும்.