இரு மடங்காக உயர்ந்த மாஸ்க் விலை.. ஏற்றுமதி தான் காரணமா?!

 

இரு மடங்காக உயர்ந்த மாஸ்க் விலை.. ஏற்றுமதி தான் காரணமா?!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு முககவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு மாஸ்க் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு முககவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு மாஸ்க் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 1 ஆம் தேதி மாஸ்குகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று மத்திய அரசு அதற்குத் தடை விதித்தது. இருப்பினும் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் மாஸ்க் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் மாஸ்க் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. 

ttn

ரூ.4க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஓரடுக்கு கவசம் ரூ.17க்கும், ரூ. 6க்கு விற்கப்பட்டு வந்த மூன்றடுக்கு கவசம் ரூ.25 முதல் 30 வரை விற்கப்படுகிறது. மறுபயன்பாடு செய்து கொள்ளக்கூடிய மாஸ்க் ரூ.137க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இப்போது ரூ.270 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தும் மாஸ்க் விலை உயர்ந்துள்ளதால் அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்