இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி, வரைந்து அசத்தும் மாணவி…

 

இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி, வரைந்து அசத்தும் மாணவி…

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை ஒளிந்திருக்கும். அதை கண்டுபிடித்து வெளிக்கொணர்பவர்கள் இவ்வுலகில் சாதனையாளர்கள் ஆகிறார்கள்.

உலகில் பிறக்கும் அனைவருக்கும் இரு கைகளாலும் எழுதும் திறமை இருக்காது. சிலருக்கு இரு கைகளாலும் எழுதத் தெரிந்தாலும், கையெழுத்து தெளிவாகப் படிப்பது போல இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை ஒளிந்திருக்கும். அதை கண்டுபிடித்து வெளிக்கொணர்பவர்கள் இவ்வுலகில் சாதனையாளர்கள் ஆகிறார்கள்.இவ்வாறு, தன் தனித்திறமையை ஆறாம் வகுப்பு படிக்கும் போதே உணர்ந்த மாணவியின் திறமையைப் பற்றி அறிவோம். 

Tanuvarsha

பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு நுண்ணுயிரியல் படிக்கும் மாணவி தனுவர்ஷா. இவர், தனது தனித் தன்மையான இரு கைகளிலும் ஒரே நேரத்தில் எழுவது மற்றும் ஓவியங்கள் வரைவது போன்ற திறமையைத் தனது 12 ஆம் வயதிலேயே கண்டு பிடித்து தன் திறனை மேன்மேலும் வளர்த்துக் கொண்டுள்ளார். 

இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஒரேய நேரத்தில் இரு கைகளாலும் எழும் திறமைக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, இரு கைகளாலும் ஒரேய நேரத்தில் அழகான ஓவியங்களையும் வரையும் திறன் கொண்டவர். தனுவர்ஷாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக, அவரது பெற்றோர் இந்தியன் புக் ஆஃப் ரெகார்டஸ் இல் தனுவர்ஷாவின் தனித்தன்மையை இடம் பெற வைக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளதாக அம்மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.