இருவது வருஷமாகியும் இளமையும், அழகும் குறையாத திரிஷா!

 

இருவது வருஷமாகியும் இளமையும், அழகும் குறையாத திரிஷா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்  வருபவர் நடிகை த்ரிஷா. இவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரசிகர்களின் கனவு கன்னியாக இன்னும் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்  வருபவர் நடிகை த்ரிஷா. இவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரசிகர்களின் கனவு கன்னியாக இன்னும் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். கோலிவுட் சினிமாவுக்குள் எத்தனை நடிகைகள் வந்தாலும், போனாலும் சரி த்ரிஷாவுக்கு நிகர் த்ரிஷா தான் என்றுசொல்லும் அளவிற்கு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்ற தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய த்ரிஷா தற்போது கோலிவுட்டின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார்.

trisha

இன்று த்ரிஷாஇன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். அவரின் பிறந்தநாளான இன்று த்ரிஷாவை பற்றி சிலவற்றை தெரிந்து கொள்ளலாம். 

சர்ச் பார்க் முதல் மாடலிங் வரை: 

trisha

சென்னையில் 1983-ஆம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிறந்தார் த்ரிஷா. சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்தார். பின்னர் கல்லூரி படிப்பை சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் முடித்தார்.   பி.பி.ஏ  படித்துள்ள த்ரிஷாவுக்கு மாடலிங் துறையின் மீது இருந்த ஆர்வம் அவரை மிஸ் சென்னை, மிஸ் சேலம் போன்ற பட்டங்கள் பெற உதவியாக இருந்தது. முதன்முதலில் த்ரிஷா நகைக்கடை விளம்பரத்தில் நடித்தார். அதன் மூலமே அவருக்கு சினிமாவுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. 

சிம்ரனின் தோழியாக வந்த த்ரிஷா:

trisha

சினிமா பக்கம் எக்காரணம் கொண்டும் போக கூடாது என்று நினைத்த த்ரிஷா, சிம்ரன் தோழியாக ஜோடி படத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு லேசா லேசா, மௌனம் பேசியதே போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

trisha

இதையடுத்து த்ரிஷா திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது ஹரியின் இயக்கத்தில் வெளியான சாமி. அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் நடிக்க துவங்கிய த்ரிஷாவுக்கு ரசிகர் பட்டாளம் என்ற ஒன்றை அமைத்து கொடுத்த படம் கில்லி. அப்படத்தில் த்ரிஷா – விஜய் ஜோடி பரவலாக பேசப்பட்டது. அதன்பிறகு தான் விஜய்யுடன் ஆதி , குருவி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களிலும் இணைந்தார் த்ரிஷா.