‘இருளில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த சிறுத்தை’.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள் !

 

‘இருளில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த சிறுத்தை’.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள் !

மனிதர்களைத் தாக்குவதற்காகச் சிறுத்தை ஒன்று ஜன்னலில் எட்டிப்பார்க்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

சமீப காலமாக  உணவு பற்றாக்குறை காரணமாக யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் அங்கு இருக்கும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்நிலையில், மனிதர்களைத் தாக்குவதற்காகச் சிறுத்தை ஒன்று ஜன்னலில் எட்டிப்பார்க்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

ttn

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கிளப் ஒன்று உள்ளது. அந்த கிளப்பில் ஊழியர்கள் விளையாடுவது வழக்கம். அதே போல, நேற்று இரவும் ஊழியர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஜன்னலின் பக்கம் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம்  என்னவென்று ஊழியர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது, சிறுத்தை ஒன்று திடீரென ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளது.அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளேயே இருந்துள்ளனர்.

ttn

ஜன்னலில் இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததால் சிறுத்தையால் உள்ளே நுழைய முடியவில்லை. அதன் பின்னர், அந்த சிறுத்தை கிளப்பையே சுற்றிச் சுற்றி வந்துள்ளது. சிறிது நேரம் கழித்து அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றுள்ளது. இதனால், பீதியடைந்த ஊழியர்கள் சிறுத்தை மீண்டும் அங்கு வராதவாறு காக்குமாறு வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.