இரும்பு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்!

 

இரும்பு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம்  மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்!

அந்த கடையில் செம்மரம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

சமீப காலமாக செம்மரக் கட்டைகள் அதிகமாகக் கடத்தப்பட்டு வருகின்றன. அதன் சந்தை மதிப்பு அதிகம் என்பதால் வனத்துறைக்கு எதிராகக்  காடுகளில் புகுந்து செம்மரக் கட்டைகளை வெட்டி, தரகர்கள் மூலமாக அதனை விற்று வருகின்றனர். இத்தகைய தொழிலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதே போல செம்மரங்கள் பதுக்கிய நபர் ஒருவர்  ஸ்ரீபெரும்புதூரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ttn

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் வசித்து வருபவர் முத்து. இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில் செம்மரம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300கிலோ செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அதன் பின், அந்த கடையின் உரிமையாளரைக் கைது செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், செம்மரக் கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்த போலீசார், அதன் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.