இருமலை உடனே போக்கும் சுக்கு,மல்லி கஷாயம்!

 

இருமலை உடனே போக்கும் சுக்கு,மல்லி கஷாயம்!

மழைக்காலங்களில் ஜலதோஷத்தாலும், இருமல், சளித் தொல்லைகளாலும் பலரும் அவதிப்பட்டு வருவார்கள். அதுவும், குழந்தைகளின் நிலையோ இன்னும் பரிதாபம். எதற்கெடுத்தாலும் உடனடியாக பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று ஆண்டிபயாட்டிக் மருந்துகளைக் கொடுக்காமல் ஆரம்பத்திலேயே நோயை வரவிடாமல் விரட்டியடியுங்கள்.

மழைக்காலங்களில் ஜலதோஷத்தாலும், இருமல், சளித் தொல்லைகளாலும் பலரும் அவதிப்பட்டு வருவார்கள். அதுவும், குழந்தைகளின் நிலையோ இன்னும் பரிதாபம். எதற்கெடுத்தாலும் உடனடியாக பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று ஆண்டிபயாட்டிக் மருந்துகளைக் கொடுக்காமல் ஆரம்பத்திலேயே நோயை வரவிடாமல் விரட்டியடியுங்கள். இந்த சுக்கு, மல்லி கஷாயம் மழைக்காலத்திற்கு ஏற்றது.

sukku malli

தேவையான பொருட்கள்
சுக்கு – 10 கிராம்
மல்லி – 20 கிராம்
சீரகம் – 5 கிராம்
செய்முறை:
சுக்கு, மல்லி, சீரகத்துடன் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு, இவற்றுடன் நான்கு டம்ளர்கள் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இந்த தண்ணீரின் அளவு நன்றாக கொதித்து ஒரு டம்ளராக வற்றியதும் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் இதை ஆற வைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை என இருவேளை குடிக்க வேண்டும். இப்படிக் குடித்து வந்தால் மழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளையும் சரியாகும்.