இருப்பவர்  இறந்தார்  ,நடப்பவர்  ஊனமானார்-எல் .ஐ .சி. யையே ஏமாற்றிய ஏஜெண்டுகள் கைது

 

இருப்பவர்  இறந்தார்  ,நடப்பவர்  ஊனமானார்-எல் .ஐ .சி. யையே ஏமாற்றிய ஏஜெண்டுகள் கைது

சத்தீஸ்கரில் ராய்ப்பூரில் முன்னாள் ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) அதிகாரி மற்றும் இரண்டு முகவர்கள் எல் .ஐ .சி.யை மோசடி செய்ததால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் முன்னாள் எல்ஐசி அதிகாரி துக்காராம் சதுர்வேதிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .10,000 அபராதமாக கட்டவும்  சதுர்வேதிக்கு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் எல்.ஐ.சி அதிகாரி, உயிரோடிருப்பவரை இறந்ததாக காமித்து எல் .ஐ .சி.நிறுவனத்தை ஏமாற்றியதற்காக முகவர்களோடு  சிறைக்கு அனுப்பப்பட்டார்.
சத்தீஸ்கரில் ராய்ப்பூரில் முன்னாள் ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) அதிகாரி மற்றும் இரண்டு முகவர்கள் எல் .ஐ .சி.யை மோசடி செய்ததால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் முன்னாள் எல்ஐசி அதிகாரி துக்காராம் சதுர்வேதிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .10,000 அபராதமாக கட்டவும்  சதுர்வேதிக்கு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டு எல்.ஐ.சி முகவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனையும் ரூ .14,000 மற்றும் ரூ .10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

arrested

சதுர்வேதி, அஸ்வந்த் சாஹு மற்றும் உமா சாஹு ஆகிய எல்.ஐ.சி முகவர்களோடு சேர்ந்துகொண்டு பல போலியான இறப்பு கோரிக்கை மூலம் எல்.ஐ.சி.க்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்பட செய்ததாக, பல மோசடியில் சிக்கினர் 

டில்டா பரத்பாரா கிளையில் (சத்தீஸ்கர்) அதிகாரியான சதுர்வேதி, அதே கிளையின் முகவர்களுடன் சேர்ந்துகொண்டு  எல்.ஐ.சியை ரூ .16,10,560 / – (தோராயமாக) ஏமாற்றினார். அவர்கள் சுமார் 24 லட்சம் காப்பீட்டு கோரிக்கைகளை எழுப்பியிருந்தனர்.
ஐபிசியின் 120-பி, 420, 467, 468 & 471 பிரிவுகளின் கீழ் சிபிஐ 2014 மார்ச் மாதத்தில் வழக்கு பதிவு செய்தது. 
தீவிர விசாரணைக்கு  பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ 03.12.2014 அன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது .