இருபது ஓவர் தொடர் வெற்றி யாருக்கு? நாளை இறுதிப் போட்டி

 

இருபது ஓவர் தொடர் வெற்றி யாருக்கு? நாளை இறுதிப் போட்டி

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது

-குமரன் குமணன்

ஹாமில்டன்: இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு அணிக்கெதிரான ஓருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது இந்தியா. அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் இருபது ஓவர் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 80 ரன்கள் விந்தியாசத்திலும் அதற்கடுத்த போட்டியிட்டு இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது.

கடந்த போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி தான் நியூசிலாந்து மண்ணில் முதன் முதலாக பெற்ற இருபது ஒவர் போட்டி வெற்றியாகும். தொடரின் இறுதிப்போட்டி நாளை ஹாமில்டன் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

நியூசிலாந்து வீரர் ஃபெர்குசனுக்கு நாளைய போட்டிக்கான அணியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் புதுமுக பந்துவீச்சாளர் பளெய்ர் டிகேனெர் களமிறங்க உள்ளார். இது தவிர ஸ்காட் குக்கெய்ன் நீக்கப்பட்டு, நீஷம் சேர்க்கப்படலாம்.

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவு நம்பிக்கை அளித்த விஜய் ஷங்கர் மற்றொரு வாய்ப்பை பெறுவார் என தெரிகிறது. முதலிரண்டு ஆட்டங்களில் அவர் பந்து வீசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குல்தீப் யாதவ் XIல் தேவை என நிர்வாகம் நினைத்தால் ,தினேஷ் கார்த்திக் நீக்கபடலாம் அல்லது இது எதுவுமே நடக்காமல் கடந்த போட்டிகளின் XI தொடரலாம்.

ஹாமில்டனில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தான் இந்திய அணி 92 ரன்களுக்கு சுருண்டது என்பது நினைவிருக்கலாம். அதே சமயம், இருபது ஒவர் பேட்டி இதற்கு முன் இங்கு கடந்த ஆண்டு நடந்தபோது ஒட்டுமொத்தமாக 386 ரன்கள் குவிக்கப்பட்டன (நியூசி 194/7 இங்கிலாந்து 192/4).

நியூசிலாந்தில் முதல் முதலில் தொடரை வெல்ல கிடைத்துள்ள வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா? ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக தவறி போன 20 ஓவர் தொடர் வெற்றி நியூசிலாந்தில் நிறைவேறுமா? அல்லது நியூசிலாந்து அணி தன் பலத்தை மீண்டும் நிரூபிக்குமா? விடை நாளை தெரியும்.