இருசக்கர வாகனத்தில் சென்று வாழ்த்து கூறிய தமிழக அமைச்சர்: சர்ச்சையில் சிக்கியது எப்படி தெரியுமா?

 

இருசக்கர வாகனத்தில் சென்று வாழ்த்து கூறிய தமிழக அமைச்சர்: சர்ச்சையில் சிக்கியது எப்படி தெரியுமா?

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்று அதிமுக தொண்டர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை: தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்று அதிமுக தொண்டர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2015ல் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்புக்கு பின், தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து  இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 

இந்நிலையில் புதுக்கோட்டை இலுப்பூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளியிடம் கேட்டறிந்தார்.
பின்னர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்று அங்கிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

ஆனால் இந்த இருசக்கர வாகன பயணத்தின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் இருந்தார்.பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழக அமைச்சரே விதிமுறைகளை மீறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.