இருக்கு, இன்னைக்கி ராத்திரி சென்னைக்கி சம்பவம் இருக்கு! தமிழ்நாடு வெதர்மேன்!

 

இருக்கு, இன்னைக்கி ராத்திரி சென்னைக்கி சம்பவம் இருக்கு! தமிழ்நாடு வெதர்மேன்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் மழை வருகிறது என சென்னை கவிஞர்கள் பேப்பர் பென்சிலோடு காத்திருந்தனர். முதல் தூறல் விழுந்தவுடன் பிள்ளையார் சுழி போட்டு முதல் வரியை ஆரம்பிப்பதற்குள் மழை நின்றுவிட்டது. வாம்மா மின்னலு என அன்போடு அழைப்பதற்குள், விருட்டென சென்றுவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மழை வருகிறது என சென்னை கவிஞர்கள் பேப்பர் பென்சிலோடு காத்திருந்தனர். முதல் தூறல் விழுந்தவுடன் பிள்ளையார் சுழி போட்டு முதல் வரியை ஆரம்பிப்பதற்குள் மழை நின்றுவிட்டது. வாம்மா மின்னலு என அன்போடு அழைப்பதற்குள், விருட்டென சென்றுவிட்டது. அடுத்தமுறை மழைவரும் அறிகுறி தெரிந்தால், மொட்டை மாடியில் காயவைத்திருக்கும் துணியை எடுத்துவருவதற்கு முன், வீட்டில் இருக்கும் கவிஞர்களை கட்டிவையுங்கள். உங்களுக்கு புண்ணியமாப் போகும். ஒரு சில ஏரியாக்களில் சொல்லத்தக்க அளவில் மழை பெய்தாலும், கருவாடாக காய்ந்திருக்கும் சென்னைக்கு இம்மழை கடலில் கரைத்த பெருங்காயம்.

Rain Clouds

இந்நிலையில், வாராது வந்த மாம‌ணியாய் இன்றைக்கு இரவு சென்னையை நனைக்க காத்திருக்கிறதாம் மழை. சொல்வது நம்பிக்கைக்குரிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இதுகுறித்து ட்வீட் ஒன்றை பதிந்துள்ள ஜான், கடலிலிருந்து கிளம்பிய காற்று வேலூரைச் சுற்றி தற்போது மழைமேகங்களை குவித்துள்ளது என்றும், இன்று இரவு ராகுகாலம் கடந்தபின்னர், சென்னை நோக்கி அணிவகுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். இறைவா செம்பரம்பாக்கம் வெள்ளமே வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்த மழை கவிஞர்களிடம் இருந்து மட்டும் எங்களை காப்பாற்று!