இருக்குற பிரச்னையில இதுவேற… சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

 

இருக்குற பிரச்னையில இதுவேற… சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைந்த பிறகு அதிமுக இரண்டு பிளவாக பிரிந்தது.  இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என சிக்கல் எழுந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் 2017-ல் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மற்றும் சசிகலா மனு தாக்கல் செய்திருந்தனர்.

sasikala

இதனை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல் முறையீடு செய்தார். அதனையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின் தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் கடந்த ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.