இருக்கிற பாடங்களை ஒழுங்கா நடத்தினாலே போதும்…! ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு அதிரடி காட்டிய செங்கோட்டையன்..!?

 

இருக்கிற பாடங்களை ஒழுங்கா நடத்தினாலே போதும்…! ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு அதிரடி காட்டிய செங்கோட்டையன்..!?

மக்களை எப்போதும் பயம், பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆட்சியில் உள்ளவர்கள் நினைப்பார்களோ என்னவோ, 5 மற்றும் 8ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தனர். இது சாதாரண தேர்வு தான் என்று முதலில் கூறினார்கள். பிறகு, தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்தப்படும் என்றார்கள்.

மக்களை எப்போதும் பயம், பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆட்சியில் உள்ளவர்கள் நினைப்பார்களோ என்னவோ, 5 மற்றும் 8ம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தனர். இது சாதாரண தேர்வு தான் என்று முதலில் கூறினார்கள். பிறகு, தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்தப்படும் என்றார்கள். அதிலும் தோல் அடைந்தால் அவர்கள் நிலை என்ன என்று கேட்டபோது அதெல்லாம் பிரச்னை இல்லை என்று சமாளித்தார்கள். தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இது தொடர்பாக நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

teach

இதுநாள் வரை மாணவர்களையும் பெற்றோர்களையும் தேர்வு பயத்தால் கொடுமை செய்துவந்தவர்கள் பத்திரிகைகளால் ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு மிகவும் நல்ல காரியத்தை செய்துவிட்டது போன்று எழுதுகிறார்கள். இந்த தேர்வை கொண்டு வந்தவர்களே இவர்கள்தான் என்பதை சௌகரியமாக மறந்துவிட்டார்கள்.
இந்த நிலையில், தேர்வுக்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் நிருபர்களிடம் பேசிய செங்கோட்டையன், “5 மற்றும் 9ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் திருப்பித் தரப்படும்.

school

பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் வசூலித்த தொகையை திருப்பித் தருவதுதான் ஆசிரியர்களின் கடமை. புதிய கல்விக் கொள்கை குறித்த முழு விவரம் தமிழக அரசுக்கு வரவில்லை. வந்ததும் அது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.

அரசு பள்ளிகளில் இந்தி பாடத்தை விருப்ப படமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று அரசு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இருக்கும் பாடங்களை ஒழுங்காக சொல்லிக்கொடுத்தாலே போதும்” என்றார்.