இரான் தளபதி இறுதிச்சடங்கு…நெரிசலில் சிக்கி 56 பேர் மரணம்.

இரான் தளபதி இறுதிச்சடங்கு…நெரிசலில் சிக்கி 56 பேர் மரணம்.

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் புரட்சிப்படைகளின் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் உடல் அவரது சொந்த நகரமான கெர்மானுக்கு கொண்டுவரப்பட்டது.நவின இரானின் ஸ்தாபகரான அய்த்துல்லா கொமானியின் சாவுக்கு வந்ததை விட அதிக மக்கள் சுலைமானியின் இறுதி யாத்திரையில் பங்கேற்க வந்திருக்கிறார்கள். 

final procession

கொல்லப்பட்ட தங்கள் ஹீரோவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுக்கடங்காத உணர்ச்சிவசப்பட்ட  மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக  இதுவரை 32 பேர் இறந்திருக்கலாம் என்று அல்- ஜெசிரா செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

அமெரிக்காவுக்கும்,இஸ்ரேலுக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பியபடி இறுதி ஊர்வலம் நடந்தது.அமெரிக்கப் படைகளை இராக்கில் இருந்து வாபெஸ் பெற முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததை அடுத்து,’ அவர்களாகப் போனால் நடந்து போகலாம், இல்லாவிட்டால் சவப்பெட்டிக்களில் படுத்துக்கொண்டுதான் வருவார்கள் என்று இரான் புரட்சிப்படையும் பதில் 
சவால் விட்டிருக்கிறது.

final procession

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரானை 52 இடங்களில் வேகமாகவும், கடுமையாகவும் தாக்குவோம் என்று சொன்னதுடன், இரானின் கலாச்சார சின்னங்களையும் தாக்குவோம் என்று சொல்லி இருந்தார். இது அமெரிக்காவிலேயே எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. ஒரு நாட்டின் கலாச்சார, பாரம்பரிய சின்னங்களைத் தாக்குவது தீவிரவாதம். அது போர் குற்றம் என்று எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. 

டரம்ப்பின் உற்ற துணை என்று கருதப்படும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கலாச்சார சின்னங்களைத் தாக்குவது தவறு என்று சொல்லி இருக்கிறார். யார் எப்படியோ ஜெர்மனி இப்போதே அந்தப் பகுதியில் இருக்கும் தனது படைகளை நாடுதிரும்பும்படி உத்தரவிட்டு விட்டது.