இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை! தளர்வுகள், கட்டுப்பாடுகள் என்னென்ன…?

 

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை! தளர்வுகள், கட்டுப்பாடுகள் என்னென்ன…?

நாடு முழுவதும் மே.31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டிருக்கும் சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மே.31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டிருக்கும் சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

  • பொது இடங்கள், பணியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்
  • தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; எச்சில் துப்பக்கூடாது
  • அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது
  • கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்
  • மாநில அரசுகள் அனுமதி அளித்தால் சிவப்பு மண்டலங்களில் சலூன்களை திறக்கலாம்
  • திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்; தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் கட்டாயம்
  • பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி
  • நிறுவனங்கள் இயன்ற அளவு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்
  • நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுபான கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிப்பு
  • அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை; தனிமனித இடைவெளி அவசியம்
  • உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நீட்டிப்பு; டோர் டெலிவரி செய்ய அனுமதி
  • மரணம் உள்ளிட்ட  துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி.
  • பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை.கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம் – 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை.
  • முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் 
  • சிவப்பு மண்டலங்களிலும் சலூன்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் 
  • பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்
  • மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மதத்துடன் இயக்கலாம்
  • அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
  • பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
  • மெட்ரோ ரயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும்
  • விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை