இரவில் வெளியில் வர பயப்படும் ஊர் மக்கள்…அப்படி என்ன தான் இருக்கு அந்த ஏரியில்…!

 

இரவில் வெளியில் வர பயப்படும் ஊர் மக்கள்…அப்படி என்ன தான் இருக்கு அந்த ஏரியில்…!

ஊருக்குள் வர துவங்கியுள்ளதாம். ஏரியில் முதலை இருப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரத்தில் மிகப்பெரிய  ஏரி உள்ளது. இந்த ஏரியில் முதலைகள் உள்ளன. மேலும் ஏரிக்கு அருகில் பல குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. மதிய  நேரத்தில் ஏரியில் உள்ள மணல் திட்டுகளில் தங்கியிருந்த முதலைகள் தற்போது ஊருக்குள் வர துவங்கியுள்ளதாம். ஏரியில் முதலை இருப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

ttn

சமீபத்தில்  பெய்த மழையின் காரணமாக ஏரியில் நீர் அதிகரித்துள்ளது. இதனால் கரைக்கு வர துவங்கியுள்ள முதலைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்கு வீடுகளில் உள்ள கோழி, வாத்து, நாய் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் யாரும் வெளியில் வருவதில்லையாம்.

ttn

இதுகுறித்து கூறும் அப்பகுதி மக்கள், ‘வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து  சில வருடங்களுக்கு முன்பு வெளியேறிய முதலை குட்டிகள், சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள ஏரிகளில் தஞ்சமடைந்தன. தற்போதும் து வளர்ந்து குடியிருப்பு பகுதிகளில் வலம்வருகிறது. இதனால் நாங்கள் பயத்தில் உள்ளோம். அதிகாரிகள்  அசம்பாவிதம் நடப்பதற்குள்  இந்த முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்கின்றனர்.