இரவில் நீல நிறமாய் ஒளிர்ந்த கடற்கரை : காரணம் இதுதானாம் மக்களே!

 

இரவில் நீல நிறமாய் ஒளிர்ந்த  கடற்கரை : காரணம் இதுதானாம் மக்களே!

சென்னையில் கடல் நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்டது போல ஒளிர்ந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவில் நீல நிறமாய் ஒளிர்ந்த  கடற்கரை : காரணம் இதுதானாம் மக்களே!

சென்னை: சென்னையில் கடல் நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்டது போல ஒளிர்ந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வார இறுதி நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடமாக கருதப்படுவது கடற்கரை தான். இரவு நேரங்களில் கடலையும் அதனுடன் சேர்ந்து நிலவையும் ரசிக்கவே பலரும் இரவு நேரங்களில் கடற்கரைக்குப் படையெடுப்பர். அந்த வகையில் திருவான்மியூர் கடற்கரைக்குச் சென்றவர்கள் கண்ணில் பட்ட வினோதம் தான் நீல நிற கடற்கரை. கடலலைகள் நீல விளக்கு பொருத்தப்பட்டது போல நிறம் மாறி காட்சி அளித்தன. நீல நிற மின்மினி பூச்சுகள் கடல் அலையில் அமர்ந்து கொண்டு கரைபுரண்டு ஓடி வந்து கரையைத் தொட்டுச் செல்வது போல இருந்தது அந்த ரம்மியமான காட்சி. 

இருப்பினும் கடல் இப்படி திடீரென்று  நீலநிறமாகத் தோன்றக் காரணம்  என்ன என்பதை இப்போது பார்க்கலாம். டயனோப்ளாஜலேட்ஸ் என்ற ஒரு பாசி தான் கடல் நீர் இப்படி நீல நிறமாக மாறியுள்ளதாம்.  சிறுமீன்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் அந்தப் பாசி, நீலநிற வண்ணத்தை வெளியிடுமாம். அப்போது ஒளி வெள்ளத்தில், பெரிய மீன்கள் சிறிய மீன்களைத் தின்றுவிடுமாம். ஆனால் இவை அதிகமானால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று  ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பாசிகள் பலவும் நச்சுத்தன்மை கொண்டவை.இவை அதிகமாகும் போது  அதை மீன்கள் உட்கொள்வதால் அது மனிதன் வரையிலும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.

 
இதுகுறித்து கூறும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையமான NCCRன் விஞ்ஞானி பிரவாகர் மிஸ்ரா, சமீபத்தில் பெய்த  மழையால் கடலில் சேர்ந்த கழிவுகளிலிருந்து நைட்ரஜன் கலந்த பொருட்களில் இருந்து இந்த ஒளி வெளியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறார். இருப்பினும் இதுகுறித்து ஆய்வு செய்ய அவர்கள் இன்று நேரில் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவொருபுறமிருக்கத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவினால் கூட இந்த மாற்றம்  ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.