இரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணுங்க!?

 

இரவில் ஆழ்ந்த தூக்கம்  வேண்டுமா? அப்போ கண்டிப்பா இத ட்ரை பண்ணுங்க!?

தினம் தோறும் உடற்பயிற்சி செய்வதின் மூலம். உடலில் தசைகள் வலுவாகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை உடற்பயிற்சி தருகிறது.

தினம் தோறும் உடற்பயிற்சி செய்வதின் மூலம். உடலில் தசைகள் வலுவாகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை உடற்பயிற்சி தருகிறது. மேலும் உடற்பயிற்சியினால் இரவில் ஆழ்ந்த தூக்கம்  கிடைக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக இளம் வயதினர் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்தால், இரவில் நீண்ட உறக்கத்தைப் பெறுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

sleep

இளம்பருவத்தில் ஹார்மோன்கள், மன அழுத்தம், பயம், பதற்றம், உணவுப் பழக்கம் போன்றவை இளம் வயதினரிடையே அதிகம் இருக்கும் என்பதால் அவர்களுக்குத் தூக்கம் சீராக இருக்காது.  தூக்கம்  என்னும் அருமருந்து உங்களுக்குக் கிடைக்கவிட்டால், உங்களின்  நினைவாற்றல், அறிவாற்றல் போன்றவை பாதிக்கப்படும். இது குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில்  417 இளம் வயதினர் உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில், தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக உடற்பயிற்சி செய்தவர்கள் இரவில், 18 நிமிடங்கள் முன்பே தூங்குவதுடன் 10 நிமிடங்கள் கூடுதலாகத் தூங்குவதும் தெரியவந்துள்ளது. 

egg

தூக்கத்தை  அதிகரிக்க உணவுகளும் நமக்குப் பயன்படுகின்றன.   உதாரணமாக, முட்டை, மீன், கீரைகள், பாதாம், வாழைப்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவை  தூக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம், உங்கள் உடல் ஆற்றலையும் நேர்மறையான எண்ணங்களையும் பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.