இரத்த-சிவப்பு நிறமாக மாறிய அண்டார்டிகா பனி – விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

 

இரத்த-சிவப்பு நிறமாக மாறிய அண்டார்டிகா பனி – விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

அண்டார்டிகாவில் பனி இரத்த சிவப்பு நிறமாக மாறிய நிகழ்வு நடந்துள்ளது.

உக்ரைன்: அண்டார்டிகாவில் பனி இரத்த சிவப்பு நிறமாக மாறிய நிகழ்வு நடந்துள்ளது.

அண்டார்டிகாவில் பனி இரத்த சிவப்பு நிறமாக மாறிய நிகழ்வு நடந்துள்ளது. இதனை உக்ரைன் நாட்டு அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இயற்கை எப்போதும் ஆச்சர்யங்களை கொடுக்க கூடியது. அண்டார்டிகாவில் உள்ள முன்னாள் பிரிட்டிஷ் நிலைய விஞ்ஞானிகள் ஒரு புதிய மாற்றத்தை அண்டார்டிகாவில் கண்டனர். அழகிய வெள்ளை நிறத்திலான பனி இரத்த-சிவப்பு நிறத்தில் மாறியதை கண்டு அவர்கள் வியந்தனர். இந்த ஆராய்ச்சி நிலையம் உக்ரைனுக்கு சொந்தமானதாகும். இது வெர்னாட்ஸ்கி ஆராய்ச்சி தளம் என்று அழைக்கப்படுகிறது.

ice

இந்த ஆராய்ச்சி நிலையத்தில் நியமிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தான் அண்டார்டிகாவில் நிகழ்ந்த இந்நிகழ்வின் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், “அதீத குளிர்நிலையில் ஒரு புதிய வகை ஆல்காவால் ஏற்படுகிறது. இது தீவிர குளிர்நிலையில் உயிர் வாழும் திறன் கொண்டது. இந்த பாசிகள் மனிதர்களுக்கு நச்சுத் தன்மையுள்ளது” என்றனர். அண்டார்டிகாவில் நிகழ்ந்த இந்த மாற்றம் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தால் நடந்தது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.