இரத்த சிவப்பாக மாறிய வான்வெளி… பதறியடித்த பொதுமக்கள்!

 

இரத்த சிவப்பாக மாறிய வான்வெளி… பதறியடித்த பொதுமக்கள்!

வான்வெளி முழுவதும் இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்து பொதுமக்களுக்கு பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீங்கள் இதே பக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில், பலரும் தொடர்ந்து தங்களது அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

வான்வெளி முழுவதும் இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்து பொதுமக்களுக்கு பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீங்கள் இதே பக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில், பலரும் தொடர்ந்து தங்களது அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். ஓராயிரம் வார்த்தைகளில் பிரச்சனைகளில் தீவிரத்தைப் புரிய வைக்க முற்படுவதைவிட, இந்த புகைப்படங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயின் தீவிரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இந்தோனேஷியா நாட்டில் வருடா வருடம் வறண்ட வானிலை நிலவும் மாதங்களான ஜூலை முதல் அக்டோபர் வரையில், அந்நாட்டில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் தீப்பற்றி கரும்புகை வெளியேறுவதுண்டு. 

indonisia

இப்படி தீப்பற்றி கரும்புகை வெளியேறுவது அந்நாட்டில் வாடிக்கையாக இந்த மாதங்களில் நிகழும் ஒன்று தான். ஆனால், இந்த ஆண்டு வறண்ட வானிலை காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ, தொடர்ந்து அணையாமல், பல ஹெக்டேர் பரப்பளவு நிலத்துக்கு பரவி, பற்றி எரிந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த பற்றியெரியும் தீயினால் வெளியேறிய கரும்புகையை வழக்கமான ஒன்று தான் என்று நினைத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், தீ தொடர்ந்து அணையாமல், நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களில் இருந்த மரங்களை விழுங்கி விட்டு, இன்னும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தோனேஷியாவில் பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த தீயினாலும், வெளியேற்றும் புகையின் பாதிப்பினாலும் சுற்றியிருக்கும் பொதுமக்கள் மூச்சு திணறல், தொண்டை அழற்சி மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் முகமூடி அணிந்தபடியே நடமாடி வருகின்றனர். இந்தநிலையில், புகை படிந்திருக்கும் இந்தோனேஷியாவின் வான் பரப்பு மொத்தமும் திடீரென்று தீயினால் எழும் புகையில், இரத்த சிவப்பு நிறத்திற்கு காட்சியளித்தது.  இதைப் படம் பிடித்து ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டதை தொடர்ந்து பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை சுமார் 34,000 முறை மறுபதிவு செய்துள்ளனர். இந்தோனேஷியாவில், வானில் சிவப்பு நிறம் தோன்றியதற்கு ‘ரேலே சிதறல்’ தான் காரணம் என அந்நாட்டு வானிலை மையம் கருத்து தெரிவித்துள்ளது.