இரத்தத்தை மாற்றி ஏற்றிய டாக்டர்கள், பரிதாபமாக பலியான தாய்!

 

இரத்தத்தை மாற்றி ஏற்றிய டாக்டர்கள், பரிதாபமாக பலியான தாய்!

மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்கு உத்தரவிடும்போதுதான், பானோவிற்கு O + ரத்த வகை இருந்ததும், ஆனால் மருத்துவர்கள் அலட்சியமாக அவருக்கு B + ரத்தத்தை ஏற்றியதும், இதனாலேயே பானோ உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆந்திரா, அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி அக்தர் பானோ பிரசவத்திற்காக அனந்தபூர் அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிசேரியன் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய்- சேய் இருவரும் ஆரோக்கியமாக இருந்துள்ளனர். சிசேரியனுக்கு அடுத்த நாள் பானோவின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்ததால், ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. வெறும் 100 மிலி ரத்தம் ஏற்றப்பட்டவுடனேயே பானோவின் உடலில் ஆபத்தான அறிகுரிகள் தென்படவே, உடனடியாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். ஆனால் மறுநாள் மருத்துவர்கள் பானோவின் கணவரிடம், பானோ திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

blood transfusion

சிகிச்சையில் ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்த பானோவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்கு உத்தரவிடும்போதுதான், பானோவிற்கு O + ரத்த வகை இருந்ததும், ஆனால் மருத்துவர்கள் அலட்சியமாக அவருக்கு B + ரத்தத்தை ஏற்றியதும், இதனாலேயே பானோ உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாமல், உயிரிழப்புக்கு வேறு காரணம் கூறி அதனை மறைக்கவும் செய்துள்ளனர்.