இரத்தத்தை சுத்திகரிக்கும்  வரகு இட்லி

இரத்தத்தை சுத்திகரிக்கும்  வரகு இட்லி

தற்காலத்தில் நமது பாரம்பரிய உணவுகளை மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.நம் ஆரோக்கியத்திற்கு கெடுதல் உருவாக்காத உயிர்ச்சத்து நிறைந்த  சிறுதானியங்கள்  உடல் வலிமைக்கும் , மனதின் மகிழ்ச்சிக்கும் இன்றியமையாதது  என்று இன்றைய சூழலில் உணர்ந்தே இருக்கிறோம். பொதுவாகவே ஆவியில் வேக வைத்து சமைக்கப்படும் உணவு பொருட்கள் மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும். சிறுதானியத்தில் சமைத்தால் கூடுதல் சக்தி கிடைக்கும். செரிமான பிரச்சினைகளும் இருக்காது. 

varagu idly

தேவையான பொருட்கள்
வரகு அரிசி – 1கப்
உளுந்து – 1கப்
அவல் – 1டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வரகு அரிசி, உளுந்து, அவலை மூன்றையும் நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அதன் பிறகு மூன்றையும் கிரைண்டரில் மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த மாவில் உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். மாவு நன்றாகப் பொங்கிய பிறகு, கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்க வேண்டும். 10 நிமிடத்தில் சுவையான , மிருதுவான , ஆரோக்கியமான இட்லி ரெடி. சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறினால் ருசியாக இருக்கும். 

varagu idly

வரகு அரிசியைப் பயன்படுத்தி சமைப்பதால், சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுக்கலாம். உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வரகரிசி ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் செய்கிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி வரகரிசி கொண்டு செய்யப்படும் இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவது நல்லது.