இரண்டு லட்சம் ரூபாய் பைக்கா இருந்தால் என்ன… போதையில் போனதால் பரிதாபம்!

 

இரண்டு லட்சம் ரூபாய் பைக்கா இருந்தால் என்ன… போதையில் போனதால் பரிதாபம்!

நாகையில் ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய பைக்கில் சென்ற நபர், போதை காரணமாக காரில் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகையில் ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய பைக்கில் சென்ற நபர், போதை காரணமாக காரில் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெள்ளைத்திடல் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் பைக் ரேசராக இருந்துவந்தார். அதிவேகமாக பைக் ஓட்டுவதில் கெட்டிக்காரர். கடந்த பொங்கலன்று புதிதாக ரூ. 2லட்சத்துக்கு வாங்கிய பைக்கில் நண்பர் உதயகுமாருடன் திருவாரூர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சந்தைதோப்பு என்ற இடத்தில் வந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த காரில் மோதி கீழே விழுந்தார்.

ilavarasan

படுகாயம் அடைந்த இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இளவரசன் உடல் கவலைக்கிடமாகவே அவரை உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

college

இந்த நிலையில், இளவரசன் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், விபத்து மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைக் கேட்ட இளவரசன் மற்றும் உதயகுமாரின் உறவினர்கள் கோபமடைந்தனர். விதிமுறைகளை மீறி வேகமாக வந்த கார் மீதுதான் தவறு. எனவே, காரை ஓட்டி வந்தவர் மீது வழக்கு பதிவ செய்ய வேண்டும் என்று கூறி திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உதயகுமார் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாகை டி.எஸ்.பி முருகவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தனர்.

magai

இதனால் கடுப்பான டி.எஸ்.பி, “சாலை விதிகளை மதித்து நடக்கும்படி போலீஸ் கூறினால் கேட்பது இல்லை. மது அருந்திவிட்டு வண்டி ஓட்டாதீர்கள், அதிவேகமாக வண்டி ஓட்டாதீர்கள், ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்கள் என்று சொன்னால் எதையும் கேட்பதில்லை. பிறகு தவறு நடந்த பிறகு வந்து போராட்டம் நடத்துகின்றீர்கள்” என்று பேசினார். இதன் பிறகு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், திருவாரூர் நாகை சாலையில் சில மணி நேரத்துக்கு போக்குவரத்து தடைப்பட்டது.