இரண்டு ரியர் கேமராவுடன் களமிரங்கவுள்ளது விவோ யூ1…

 

இரண்டு ரியர் கேமராவுடன் களமிரங்கவுள்ளது விவோ யூ1…

இந்த விவோ யூ1 ஸ்மார்ட் போனானது 6.22 இன்ச் டிஸ்பிளே மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் தனது யூ1 ஸ்மார்ட் போனை கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் அரிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இந்தியாவில் வரும் மே மாதம் ஆரம்பத்தில் விவோ நிருவனம் யூ1 ஸ்மார்ட் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த விவோ யூ1 ஸ்மார்ட் போனானது 6.22 இன்ச் டிஸ்பிளே மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

vivo u 1

இந்த விவோ யூ1 ஸ்மார்ட் போனானது இரண்டு வகையான ரேம்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்னல் மெமரியுடனும் மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டெர்னல் மெமரியுடனும் வெளியாகவுள்ளது.

விவோ யூ1 ஸ்மார்ட்போன் எல்.யி.டி ஃபலாஷ்சுடன் 13எம்.பி + 8எம்.பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்.பி       செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

vivo u 1

விவோ யூ1 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதிகளை உள்ளடக்கியது. மேலும் 4030 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் ஆண்ராய்டு 8.1 ஓரியோ ஃபண்டச் ஓஎஸ் 4.5 இயங்குதளம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.