இரண்டு முறை சிறைக்கு சென்ற ரஜினிகாந்த்! எதற்காக தெரியுமா?

 

இரண்டு முறை சிறைக்கு சென்ற ரஜினிகாந்த்! எதற்காக தெரியுமா?

இதுவரை இரண்டு முறை ரஜினிகாந்த் சிறைக்கு சென்றுள்ளார். 

இதுவரை இரண்டு முறை ரஜினிகாந்த் சிறைக்கு சென்றுள்ளார். 

16 வயதினிலே, காயத்ரி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, பில்லா, தில்லு முல்லு, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்களில் நடித்து அதிரடி நாயகனாக ரஜினிகாந்த வலம் வந்த காலத்தில் அவர் சிறைக்கும் சென்றுள்ளார்.

ரஜினிகாந்த்

1979 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்போதைய பிரபல பத்திரிக்கையாளர் ஜெயமணி என்பவரை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமணி அளித்த புகார் மனுவில், ”சென்னை மியூசிக் அகாடமி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே காரில் வந்த ரஜினிகாந்த், என் மீது மோத முயன்றார். நான் சுதாரித்து நகர்ந்து கொண்டதால் தப்பித்தேன். என் மீது காரை ஏற்ற முயற்சித்ததோடு என்னை கொலை செய்துவிடுவதாகவும் ரஜினிகாந்த மிரட்டினார்.”  என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து 1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி இரவு ரஜினிகாந்த் ராயப்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்று நள்ளிரவு வரை ரஜினியை சிறையில் அடைத்த காவல்துறையினர், அவரிடம் விசாரண நடத்தினர். அதன்பிறகு மார்ச் 8 ஆம் தேதி காலை ரஜினிகாந்த் ஜாமீனில் வெளியே வந்தார். 

ரஜினிகாந்த்

இதையடுத்து அதே ஆண்டில் ஜூன் 20 ஆம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஐதரபாத் சென்ற ரஜினி, சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த  ரஜினி,  “இந்தியர்கள் எல்லாம் நாய் என திட்டியுள்ளார்”. இதையடுத்து ரஜினிக்கும் அவர் உடன் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, ரஜினிகாந்த் விமான நிலைய கண்ணாடிகளையெல்லாம் ஆத்திரத்தில் உடைத்துள்ளார். இதையடுத்து அங்குவந்த காவல்துறையினர் ரஜினியை கைது செய்து விமான டிக்கெட்டையும் ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் அடுத்த நாள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக வலம்வந்தது.