இரண்டு மாதங்களுக்குள் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும்: அதிகாரப்பூர்வ தகவலால் பரபரப்பு

 

இரண்டு மாதங்களுக்குள் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும்: அதிகாரப்பூர்வ தகவலால் பரபரப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

13 உயிர்களை காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலை, நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும். இல்லையெனில், ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையீடு செய்து அனுமதி பெற வாய்ப்புள்ளது என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதாகவும், இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

sterlite

அதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து, தூத்துக்குடியில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறும் சூழல் உருவாகியது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்றும், அந்த முடிவில் தமிழக அரசு தெளிவாக இருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் பேசி வந்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், இரண்டு மாதங்களுக்குள் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.