இரண்டு மனைவிகளுடன் பந்தாவாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் சரவணன்

 

இரண்டு மனைவிகளுடன் பந்தாவாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் சரவணன்

சரவணன் தனது இரண்டு மனைவி மற்றும் பிள்ளையோடு ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்

நடிகர் சரவணன் தனது மனைவிகளோடு ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

 

பிக் பாஸ் வீட்டிலிருந்து  அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன் ஒரு எபிசோடில், தன் வாழ்வின் கடினமான பாதையை கடந்துவந்ததை உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார். அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற சூர்யஸ்ரீயை,  பெற்றோர் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டது, திருமணமான பின் நீண்ட வருடங்களுக்குக் குழந்தை இல்லாமல் தவித்தது, பெற்றோர் வற்புறுத்தலால் இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடானது, பின்னர் சூர்யஸ்ரீயே திருமணத்தை நடத்தி வைத்தது எனக் கண்கலங்கக் கூறினார்.

saravanan

இதுகுறித்து கூறிய சரவணனின் முதல் மனைவி, குழந்தை இல்லாததைக் காரணம் காட்டி, சரவணனின் தாயார் அவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும், அதனால் தாமே திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் கூறி  வியப்பை ஏற்படுத்தினார்.

saravanan

இருப்பினும் சரவணன் தனது இரண்டு மனைவி மற்றும் பிள்ளையோடு ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இருப்பினும் இவர்கள்  ஒன்றாக இருக்கும் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை.

saravanan

இந்நிலையில் நடிகர் சரவணன் தனது மனைவிகள்  மற்றும் குழந்தையோடு உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.