இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தார் மு.க.ஸ்டாலின்: உண்மையை உடைத்த வைகோ

 

இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தார் மு.க.ஸ்டாலின்: உண்மையை உடைத்த வைகோ

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை  அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின்  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான எனது வேட்புமனு நிராகரிக்கப்படுமோ என்ற கவலையில் முக ஸ்டாலின் இரண்டு நாட்கள் தூங்காமல்  இருந்தார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

vaiko

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை  அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின்  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய வைகோ, நான் மாநிலங்களவைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பியவர் முக ஸ்டாலின் தான். அதனால் தான் அவர் எனக்கு சீட் கொடுத்தார். தேசத்துரோக வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கொடுத்துத் தீர்ப்பு வழங்கியது, இந்த தீர்ப்பால், தனது மனு நிராகரிக்கப்பட்டுவிடுமோ என்று எண்ணி இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தார், எனது மனு நிராகரிக்கப்படாமல் இருக்க நிறைய முயற்சிகளை அவர் செய்தார்’ என்றார்.

vaiko

முன்னதாக தேசத் துரோக  வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. மேலும் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீடு காரணமாகச் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணை  முடியும் வரை ஓராண்டு சிறைத் தண்டனையை விசாரணை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.