இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு நாளில் தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு நாளில் தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 8-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரபிக்கடல் தென்னிந்திய பகுதி மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் போக்கு மற்றும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் ஏற்பட்ட காரணத்தால் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு நிலவிவந்த சாதகமான சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

தமிழகம், புதுவையில் அக்டோபர் 26-ம் தேதிக்கு பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், அதுவும் தள்ளி போனது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு நாளில் தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.