இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!

இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாறசாலை என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் விவசாயம் செய்துவருகிறார். இவர் வளர்த்துவரும் பசுமாடு ஒன்று அண்மையில் கன்று ஈன்றது. பிறந்த கன்றை பார்த்த பாஸ்கரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ஏனெனில் அந்த  கன்றுக்குட்டிக்கு இரண்டு தலைகள், நான்கு கண்கள், இரண்டு நாக்குகள் என அசாதாரணமாக இருந்தது.

உடனே பாஸ்கர் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள், கன்றுக்குட்டியை பரிசோதித்து, மரபணு மாற்றங்களாலேயே கன்றுக்குட்டி இவ்வாறு பிறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கன்றுக்குட்டி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிசய தோற்றத்துடன் பிறந்த கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் திரண்டுவந்து பார்வையிட்டு செல்கின்றனர்.