இரண்டு அதிநவீன தொலைகாட்சி பெட்டிகளை இந்தியாவுக்குள் இறக்குகிறது சாம்சங்

 

இரண்டு அதிநவீன தொலைகாட்சி பெட்டிகளை இந்தியாவுக்குள் இறக்குகிறது சாம்சங்

கலைவேலைப்பாடுகளுடன் கூடிய ஆயிரம் ஃப்ரேம்களை முன்கூட்டியே இதனுள் தரவிறக்கி தருகிறது சாம்சங். தொலைகாட்சி பெட்டியில் ஓடும் காட்சியை அணைத்துவிட்டவுடன், நீங்கள் முன்கூட்டியே செட்டிங்கில் ஏற்றி வைத்திருக்கும் இந்த ஃப்ரேமாக டிவி மாறி உங்கள் சுவற்றை அலங்கரிக்கும்.

ஆசையா கட்டின வீட்டில் நடு ஹால்ல ஒரு பெரிய சைஸ் டிவி வாங்கி மாட்டணும்னு ஆசைதான், ஆனா அவ்ளோ பெரிய டிவியை மாட்டிட்டா, சுவர் முழுசையும் டிவியே ஆக்கிரமிச்சுக்குது, வேற போட்டோ ஒண்ணுகூட மாட்ட முடியலேன்னு ஃபீல் பண்ணுபவர்களின் குரல் சாம்சங் காதில் விழுந்துவிட்டது. உங்களுக்காகவே சாம்சங் அறிமுகம் செய்திருக்கிறது ஃப்ரேம் டிவி. அதாவது தொலைகாட்சியை ஆன் செய்தால் அது டிவியாக இருக்கும், ஆஃப் செய்துவிட்டால் ஃப்ரேமாக மாறிவிடும், அதான் ஃப்ரேம் டிவியின் ஸ்பெஷாலிட்டி. கலைவேலைப்பாடுகளுடன் கூடிய ஆயிரம் ஃப்ரேம்களை முன்கூட்டியே இதனுள் தரவிறக்கி தருகிறது சாம்சங். தொலைகாட்சி பெட்டியில் ஓடும் காட்சியை அணைத்துவிட்டவுடன், நீங்கள் முன்கூட்டியே செட்டிங்கில் ஏற்றி வைத்திருக்கும் இந்த ஃப்ரேமாக டிவி மாறி உங்கள் சுவற்றை அலங்கரிக்கும். சத்தம் கூட்டுவது, சேனல் மாற்றுவது எல்லாவற்றையும் குரல் உத்தரவுமூலமே நிறைவேற்றும் இந்த டிவி 55 இஞ்ச் சைஸில் வருகிறது.

not just a frame, But TV

ஸ்மார்ட் 7- இன் – 1 என்ற மற்றொரு டிவியையும் சாம்சங் அறிமுகப்படுத்துகிறது. இதனுடைய ஸ்பேஷாலிட்டி என்னவென்றால், இந்த டிவியை உங்கள் பர்சனல் கம்யூட்டராகவே பாவிக்கலாம். தொலைவில் இருக்கும் உங்கள் லேப்டாப்பை இந்த டிவியில் ஆக்செஸ் செய்யலாம். அட, மைக்ராசாஃப்ட் எக்செல் ஷீட்டில் செய்யவேண்டிய வேலைகளைக்கூட இந்த ஸ்மார்ட் டிவியில் செய்துகொள்ளலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.