இரண்டுங்கெட்டான் விஷால்; பெர்சனல் காண்டில் வறுத்தெடுத்த டி.ஆர்?!..

 

இரண்டுங்கெட்டான் விஷால்; பெர்சனல் காண்டில் வறுத்தெடுத்த டி.ஆர்?!..

நான் அது பண்ணுவேன், இது பண்ணுவேன்னு வந்த விஷால் ஒன்னுமே பண்ணல. தயாரிப்பாளர் சங்கம்ன்றது உங்க வீட்டு சொத்து, எங்க வீட்டு சொத்து கிடையாது.

நடிகர் டி. ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் திருமணம் சமீபத்தில் நடந்தது. குறளரசன் திருமண விழாவில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகிட்டு விருந்து சாப்பிட்டு வந்தாங்க.

dfdf

ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், அந்தப் பக்கமே போகல. என்னதான் உள்ளுக்குள்ள ஆயிரம் பிரச்னை இருந்தாலும், மனுஷன் சுக துக்கத்துல பங்கேத்துக்க வேணாமானு டி.ஆர் கூட இருந்த விஷாலின் எதிர் பார்ட்டிகள் உசுப்பிவிட. டி.ஆர் ஒருவித வெறுப்புணர்வுல இருந்துருப்பார் போல, இப்ப அதுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கவும் விஷால போட்டு வறுத்தெடுத்துட்டார்.

fsdff

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பிரச்னை பத்தி தனியார் தொலைக்காட்சி ஒன்னு டி.ஆர் கிட்ட மைக்க நீட்ட. அவரு முழுக்க முழுக்க விஷால கழுவி ஊத்திட்டார். நான் அது பண்ணுவேன், இது பண்ணுவேன்னு வந்த விஷால் ஒன்னுமே பண்ணல. தயாரிப்பாளர் சங்கம்ன்றது உங்க வீட்டு சொத்து, எங்க வீட்டு சொத்து கிடையாது. மத்தவங்க எதிர்பார்ப்ப பூர்த்தி பண்ணனும், டிக்கெட் விலைய குறைக்க முடியல, திருட்டு சிடிய ஒழிச்சுருவேன்னாரு அதையும் பண்ணல. விஷால் நடிகர் சங்கத்துல பொதுச் செயலாளரா இருக்காரு, தயாரிப்பாளர் சங்கத்துல தலைவரா இருக்காரு, ரெண்டு குதிரைல எப்படி சவாரி பண்ண முடியும். எந்த பதவிக்கும் நேர்மையா இல்ல.. விஷால் ஒரு இரண்டுங்கெட்டான்னு பேட்டி கொடுத்துருக்கார் டி.ஆர். விஷால் தரப்பு என்ன பண்றாங்கனு பொறுத்திருந்து பார்ப்போம்.