இரண்டாவது முறையாக பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன் !

 

இரண்டாவது முறையாக பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன் !

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தை குயில் தாசனின் உடல் நிலை மிகவும் மோசமானதால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2 மாதங்களுக்கு பரோல் வழங்கப்பட்டு வெளியே வந்தார்.

 

பேரறிவாளன்

இந்நிலையில், மீண்டும் அவரது தந்தை உடல் மோசமான நிலையில் உள்ளதால் பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தார். அதனால், பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

பேரறிவாளன்

அதன் படி, பேரறிவாளன் இன்று காலை புழல் சிறையிலிருந்து வெளியே  வந்து, அவரது வீட்டிற்குச் செல்ல உள்ளார். பேரறிவாளன் வெளியே வருவதால், அவர் வீடு அமைந்துள்ள இடத்தை சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 28 ஆண்டு சிறைத் தண்டனையில் பேரறிவாளன் இரண்டாவது முறையாக பரோலில் வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.