இரண்டாவது பெண் பிரதமராக மம்தா அவதரிப்பாரா?

 

இரண்டாவது பெண் பிரதமராக மம்தா அவதரிப்பாரா?

இந்திரா காந்தியை ஆதரித்து அரசியலில் தடம் பதித்த மேற்குவந்த முதலமைச்சர் மம்தா, அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பிரதமராக அரியணையேறுவாரா என்பது பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது. 

இந்திரா காந்தியை ஆதரித்து அரசியலில் தடம் பதித்த மேற்குவந்த முதலமைச்சர் மம்தா, அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பிரதமராக அரியணையேறுவாரா என்பது பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது. 

mamata

கடந்த சில நாட்களாக மோடிக்கு பயத்தை கொடுத்தவரும், சரமாரியாக திட்டவைத்தவருமான மம்தா மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைத்து பாஜகவை மேற்கு வங்காளத்திற்குள் கால்பதிக்க விடாமல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பாக்கவேண்டும். பாஜகவை வீழ்த்தும் அணி மூன்றாவது அணியோ அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவோ திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு கட்டாயம் தேவைப்படும். 

மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறுகளை தட்டிக்கேட்கும் துணிச்சலான முதல் தலைவராக மம்தாதான் அறியப்படுகிறார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை அணி திரட்டும் மம்தாவை பார்க்கும்போது அவர் மனதில் பிரமதர் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 

mamata

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா, “மோடியை ஜனநாயகம் மூலம் அடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். அதற்கு, “மம்தா என்னை அடிப்பதாக கூறியுள்ளார், நீங்கள் என்னை அடிப்பது ஆசிர்வதிப்பதற்குச் சமம், எனவே என்னை தாராளமாக அடியுங்கள்” என்று பதிலளித்தார் பிரதமர். இப்படி இவர்கள் இருவருக்குமே அடிக்கடி வார்த்தை போர் மூளும்.

மேற்கு வங்காளத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ஆட்சி செய்து வந்தது. அவர்களை விரட்டி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கொண்டு வந்து ஆட்சியை நிலை நாட்டியவர் மம்தா. 1998 ஆம் வருடம் ஜனவரி 1 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. இதுவரை 2 முறைதான் மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி களம் கண்டுள்ளது. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு பிரமோஷன் அடைவார் என்பதை இன்னும் 3 நாட்களில் தெரியும்…