இரண்டாவது நாளாகத் தொடரும் மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்..!

 

இரண்டாவது நாளாகத் தொடரும் மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்..!

ஊதிய உயர்வு, உயர் படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முழுவதிலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு, உயர் படிப்புக்கு 50% இட ஒதுக்கீடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக முழுவதிலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, அமைச்சர் விஜய பாஸ்கர் ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகளை  நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமான வாக்குறுதி கொடுத்ததால் போராட்டத்தைக் கைவிட்டனர். 

Govt. doctors

அமைச்சர் வாக்குறுதி கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவர்கள் 18 ஆயிரம் பேர் மறுபடியும்  நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தடுக்க சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மருத்துவர்களைத் தலைமைச் செயலகம் அழைத்தார். அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை, அதனால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் படி, இன்று இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 அரசு மருத்துவர்கள்

மழைக்காலம் என்பதால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களால் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம், நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விரைவில் இதற்கு ஒரு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.