இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை மைனா? காதலர் யாரு தெரியுமா? 

 

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை மைனா? காதலர் யாரு தெரியுமா? 

சின்னதிரை நடிகை மைனா தனது 2வது திருமணத்திற்குத் தயாராகியுள்ளதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சென்னை: சின்னதிரை நடிகை மைனா தனது 2வது திருமணத்திற்குத் தயாராகியுள்ளதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

வம்சம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்தினி. பின்பு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பலரது இதயங்களையும் கொள்ளையடித்தார். 

அதைத்தொடர்ந்து  பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையில், இவர் காதலித்து கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில பிரச்சனை காரணமாக, கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார். 

myna

இவர் கணவர் இறந்த பின்பு பெரிதாக எந்த ரியாக்சனும் காட்டாமல் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என்று தன் வேளைகளைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். இதை பார்த்த சிலர் கணவர் இறந்து விட்ட சோகம் கொஞ்சம் கூட இல்லாமல் ஏன் இவர் எப்படி இருக்கிறார்? என்று கடுமையாகக் கேள்வி எழுப்பி வந்தனர். 

ஆனால் அதையெல்லாம் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாத நந்தினி கணவர் இறந்து இரண்டே வருடங்களில் அடுத்த திருமணத்திற்குத் தயாராகிவிட்டார்…

mynaa

ஆம்.. இவர் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது இவரின் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. தான் ஒரு சீரியல் நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி தொடரில் நடித்து வரும் யோகேஸ்வரன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு ‘I love You papa’ என்று குறிப்பிட்டுள்ளார். 

yogesh

இதன்முலம் அவர் காதலிப்பதாகக் கூறிய சின்னதிரை நடிகர் இவராக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.