இரண்டாவது இன்னிங்சிலும் ரோஹித் சதம்… தென்னாப்பிரிக்காவுக்கு 395 ரன்கள் இலக்கு!!

இரண்டாவது இன்னிங்சிலும் ரோஹித் சதம்… தென்னாப்பிரிக்காவுக்கு 395 ரன்கள் இலக்கு!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தியுள்ளார். இதன்மூலம் 395 ரன்களை இந்திய அணி இலக்காக வைத்துள்ளது.

விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 176 ரன்கள் எடுத்தார். மயங்க் அகர்வால் 215 ரன்கள் அடித்திருந்தார். இதன்மூலம் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.

rohit sharma

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணிக்கு துவக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், டீன் எல்கர் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதன்மூலம் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இம்முறை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் நிலைத்து ஆடிய புஜாரா மற்றும் ரோகித் சர்மா இருவரும் அணிக்கு ரன் குவிக்க உதவினர். ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார். இவர் 127 ரன்கள் எடுத்து இருக்கையில் மகாராஜா பந்தில் ஆட்டம் இழந்தார். 

இவருக்கு பக்கபலமாக இருந்த புஜாரா 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி நான்காம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர் மார்க்ரம் மற்றும் டி ப்ரயின் இருவரும் களத்தில் உள்ளனர்.