இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன் தேர்வுகளிலும் முறைகேடா?!

 

இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன் தேர்வுகளிலும் முறைகேடா?!

இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன் மற்றும் ஃபையர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு கடந்த  ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது.

இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன் மற்றும் ஃபையர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு கடந்த  ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததை போல இந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்று தற்போது புகார் எழுந்துள்ளது. அதில், வேலூர் மாவட்டத்தில் 0610531 முதல் 0610798 வரை உள்ள சில எண்களைத் தவிர மற்ற அனைத்து எண்களும் தேர்வாகி இருப்பதால் அங்கு முறைகேடு நடந்திருக்கும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இது குறித்துப் பேசிய   தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரி, இது பணிகளுக்காகத் தேர்வானவர்களின் பட்டியல் கிடையாது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் வெளியாகியுள்ள பட்டியல். மொத்தமாக 8826 காலி இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக ஒரு பணியிடத்திற்கு 5 பேர் என மொத்தம் 47 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் உடல்தகுதி தேர்வு உள்ளது. அதில் வெளியாகியுள்ள தொடர்ச்சியான தேர்ச்சி விவரம் இட ஒதுக்கீடு மாறுபாடு காரணமாகக் கூட நடந்திருக்கலா. இறுதி பட்டியலில் இவ்வாறு நடந்திருந்தால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இப்போது முறைகேடு நடந்துள்ளது என்று எழுந்த புகார் தவறு என்று தெரிவித்துள்ளார்.