இரண்டாம் கட்டத் தேர்தல்: 10.41 சதவீதம் வாக்குப்பதிவு !

 

இரண்டாம் கட்டத் தேர்தல்: 10.41 சதவீதம் வாக்குப்பதிவு !

இன்று  27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. வெளியூரில் தங்கிச் செல்லும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஓரிரு இடங்களில் பதற்றம் நிலவினாலும், பல இடங்களில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியையும் கடந்து ஒரு சில இடங்களில் நடந்தது. 

ttn

அதனையடுத்து, இன்று  27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினமே நிறைவடைந்த நிலையில், இன்று அனைத்து கட்சிகளும் மும்முரமாக மக்களை வாக்களிக்கச் சொல்லி வருகின்றனர். இன்று காலை முதல் மக்கள் தங்களது ஜனநாயக கடமைகளைத் தீவிரமாக ஆற்றி வருகின்றனர். தற்போதைய நிலவரத்தின் படி, 10.41 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.