இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட ட்ரைலர் வெளியானது!

 

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட ட்ரைலர் வெளியானது!

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

 

சென்னை: இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இதில் நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சுமார் 2நிமிடம் உள்ள இந்த ட்ரைலரில் தினேஷ் லாரி ஓட்டுநராகவும், காயிலான் கடையில் பணிபுரியும் ஆளாக நடித்துள்ளார். அப்போது ஆனந்தியுடன் காதலில் விழ மற்றொரு பக்கம் வெடிகுண்டு இருக்கும் இடம் அவருக்குத் தெரிய வருகிறது. அதை தடுக்க அவர் எப்படி முயற்சி எடுப்பார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பரியேறும் பெருமாள் படம் போல் இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.