இரட்டை தலைமையை எதிர்க்கும் ராஜன் செல்லப்பா: மழுப்பும் ராஜேந்திர பாலாஜி!?

 

இரட்டை தலைமையை எதிர்க்கும் ராஜன் செல்லப்பா: மழுப்பும் ராஜேந்திர பாலாஜி!?

அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டாம் என்று கூறியுள்ள அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

சென்னை:  அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டாம் என்று கூறியுள்ள அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

rajan

அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ‘தேர்தலில் கட்சி ஏன்  தோல்வியடைந்தது என்றால்  தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லை. தொண்டர்களிடம் கருத்து கேட்டு யாரும் செயல்படவில்லை.  இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது.  மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் உள்ளவர் அ.தி.மு.க தலைவராக வேண்டும். இது என்னுடைய கருத்தோ குறையோ அல்ல. தொண்டர்களின் மனநிலை அதுவாகத்தான் இருக்கிறது.  எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் தற்போது  இல்லாததாதல் தான் தோல்வி அடைந்துள்ளோம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  9எம் எல்ஏக்களும் ஏன்  இன்னும் அம்மா சமாதிக்கு சென்று ஆசி பெறவில்லை. அவர்களை யார் தடுப்பது? இதையெல்லாம் கட்சி தலைமை எடுத்து சொல்லாதா? நான் அமைச்சர் பதவிக்காக இப்படிக் கூறவில்லை. கட்சி இன்னும் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சொல்கிறேன்’ என்றார்.

rajnedra

இந்நிலையில் இதுகுறித்து கருந்து  தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும் என்றார். 

அதிமுகவை சுற்றி எந்த கருத்து நிலவினாலும், சர்ச்சையாகப் பேசி அதை இன்னும் பெரிதாக்கி விடும் ராஜேந்திர பாலாஜியே  கருத்து கூறாமல் மழுப்பலாக பதில் கூறியிருப்பது உண்மையில் அதிமுக தலைமைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதோ என்கின்ற வலுவான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

dindukal

அதே சமயம் இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.