‘இயலாமை ஓய்வூதியம்’ மீதான வரி விதிப்பு விவகாரம்! மவுனத்தை கலைத்த நிர்மலா சீதாராமன்!

 

‘இயலாமை ஓய்வூதியம்’ மீதான வரி விதிப்பு விவகாரம்! மவுனத்தை கலைத்த நிர்மலா சீதாராமன்!

தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் ‘இயலாமை அல்லது ஊனமுற்ற ஓய்வூதியம்’ மீதான வரி விதிப்புக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு ‘இயலாமை ஓய்வூதியம்’ வழங்கப்படுகிறது. இந்த இயலாமை ஓய்வூதியத்துக்கு இதுவரை வரிவிதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இயலாமை ஓய்வூதியத்துக்கு வரி விதிக்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ராணுவ வீரர்கள்

கடந்த மாதம் 24ம் தேதியன்று, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய நேரடி வரிகள் வாரியம் இயலாமை ஓய்வூதியம் வரிவிலக்கு தொடர்பாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியத்துக்கு இனி வரி விதிக்கப்படும். 

வயது முதிர்வு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் பெறும் இயலாமை ஓய்வூதியத்துக்கு வரி விதிக்கப்படும். அதேசமயம், போர் மற்றும் தீவிரதாத தாக்குதல்களால் உடல் குறைபாடு ஏற்பட்டு அதனால் ஓய்வு பெற்ற வீரர்கள் பெறும் இயலாமை ஓய்வூதியத்துக்கு வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பாதுகாப்பு படை வீரர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர்கள்

தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக இயலாமை ஓய்வூதியத்துக்கு வரி விதிப்புக்கு ராணுவம் ஆதரவு அளித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில், இயலாமை ஓய்வூதியம் மீதான வரி விதிப்புக்கு ஆதரவாக ராணுவம் அளித்துள்ள அறிக்கையை வெளியிட்டார். 

மேலும், பல ஆண்டுகளாக இயலாமைக்காக பரந்த மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் வரி விலக்குடன் அதிக இழப்பீடு வழங்கப்படுவதால், வாழ்க்கை நடைமுறையால் ஏற்படும் நோய்களுக்கும் இயலாமை பலனை கேட்பவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் பெரிய கவலையை ஏற்படுத்தும். ராணுவத்தில் மருத்துவ குறைபாடுகளை கொண்ட பணியாளர்களை வைத்திருக்க முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கான சவாலும் அதிகரிக்கும் என பதிவு செய்து இருந்தார்.