இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைகேல் மேயர், திதியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  

2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைகேல் மேயர், திதியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  

உலக அளவில் பொருளாதாரம், அமைதி, இயற்பியல், மருத்துவம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஸ்வீடிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு சார்பாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. 2019-ம் ஆண்டு, நோபல் பரிசு பெறுபவர்களுக்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize

இப்போது அறிவிக்கப்படும் நோபல் பரிசு டிசம்பர் மாதம் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைகேல் மேயர், திதியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.  சூரியக் குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக இந்த 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.