இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

 

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

நடப்பாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனா ஸ்டிக்லாண்டு ஆகிய விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனா ஸ்டிக்லாண்டு ஆகிய விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, லேசர் இயற்பியல் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனா ஸ்டிக்லாண்டு ஆகிய விஞ்ஞானிகளுக்கு 2018-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது