இயற்கையான முறையில் குழந்தைகளுக்கான ஆரோக்கிய கண் மை

இயற்கையான முறையில் குழந்தைகளுக்கான ஆரோக்கிய கண் மை

இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பேர், உங்கள் பால்யத்தில், கொட்டாங்குச்சியில் கண் மை சேர்த்து, குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறீர்கள். இப்பொழுதெல்லாம் கண் கவர் டிசைன்களில், விதவிதமான பெயர்களில் மை டப்பாக்கள் சந்தையில் கிடைக்கிறது. ஆனாலும், நாம் பார்த்து பார்த்து அக்கறையுடன் செய்கிற கண் மையில் இருக்கும் ஆரோக்கியம் அதில் கிடைக்குமா?

baby

குழந்தை என்றாலே அழகு தான். அதற்கு அலங்காரம் செய்வது இன்னும் அழகு. இன்றைய நாட்களில் கடைகளில் விற்கும் மையால் சரும பாதிப்பு பல உண்டாகிறது. நாம் பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே மை தயாரித்து கொண்டால் அழகோடு ஆரோக்கியமும் சேரும். இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த மையை குழந்தைகளுக்கு இடுவதால் வாந்தி, பேதி, வயிறு வலி, வராது என்கிறார்கள். தோஷம் நீங்கும் . எளிமையான முறையில் வீட்டிலேயே விரைவில் இதை தயார் செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

வசம்பு – 1கட்டை
சோற்றுக் கற்றாழை     -1மடல்
விளக்கெண்ணெய்       -3டீஸ்பூன்
வேலம் பட்டை         -சிறிது

செய்முறை

baby

வசம்பு, சோற்றுக் கற்றாழை, வேலம்பட்டை காய்ந்தது மூன்றின் மீதும் 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி எரிய விட்டு நன்கு கரியாக்க வேண்டும். இந்த கரியை ஒரு  மூடிய பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும். இது மூலிகை மை. இந்த மையை குழந்தையைக் குளிப்பாட்டியதும் நெற்றி, கன்னம், உள்ளங்கை, உள்ளங்கால்களில் பொட்டு வைத்து விடவும். குழந்தை விளையாடும் போது கைகளில் உள்ள பொட்டு குழந்தையின் வாய்க்குள் போனாலும் கூட அதனால் ஒரு தீங்கும் கிடையாது. அது அவர்களுக்கு ஆரோக்கியமான மருந்தாகிறது.