இயற்கையான முறையில் உங்கள் உடலை சுத்தப்படுத்துவது எப்படி! இயற்கையின் ரகசியம்..! 

 

இயற்கையான முறையில் உங்கள் உடலை சுத்தப்படுத்துவது எப்படி! இயற்கையின் ரகசியம்..! 

நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுதான் நமது வெளிப்புற அழகாக இருக்கும்!
உங்களை டீடாக்ஸ் செய்ய வேண்டுமா?உடலில் சேரும் அழுக்குகளை சரியான நேரத்தில் வெளியேற்றிவிடவேண்டும் இல்லையெனில் அவை உங்கள் உடலில் சேர்ந்து பல நோய்களை கொண்டுவந்துவிடும்.இவை உங்கள் சருமத்தையும் பாதிக்கும்

இயற்கையான முறையில் உங்கள் உடலை சுத்தப்படுத்துவது எப்படி! இயற்கையின் ரகசியம்..! 

நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுதான் நமது வெளிப்புற அழகாக இருக்கும்!
உங்களை டீடாக்ஸ் செய்ய வேண்டுமா?உடலில் சேரும் அழுக்குகளை சரியான நேரத்தில் வெளியேற்றிவிடவேண்டும் இல்லையெனில் அவை உங்கள் உடலில் சேர்ந்து பல நோய்களை கொண்டுவந்துவிடும்.இவை உங்கள் சருமத்தையும் பாதிக்கும். உடற்பயிற்சி செய்வது, குடி பழக்கத்தை விட்டுவிடுதல் சீரான டயட் மைண்டைன் செய்தல் ஆகியவை உங்கள் உடலை சரியான நிலைக்கு கொண்டுவரும்.ஆதலால் சரியான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த முறை உங்களின் அதிகப்படியான ஜங்க் புட் சாப்பிடுவதை குறைக்கச்செய்யும். புது வருடத்தை ஒரு நல்ல ஆரோக்யமான பழக்கத்துடன் தொடங்குங்கள். 

vegetables

உடலை டீடாக்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்;

1.பச்சையான காய்கறிகளை உண்ணுதல்:

கீரை வகைகளை அதிகமாக உங்கள் தினசரி உணவில் சாப்பிடுவது மிகவும் முக்கியம்.பச்சையாக சாப்பிடுதல் மிக முக்கியம் அது உங்கள் உடலில் குளோரோபில் அளவை அதிகப்படுத்தும் மேலுமிது சுற்றுசூழல் விஷமிகளான ஹெர்பிசைட்ஸ்,ஸ்மோக் ஆகியவை உங்களை அண்டவிடாது.

2.எலுமிச்சையின் நன்மைகள்:

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரை தண்ணீரில் கலந்து குடிப்பது உங்கள் வயிற்றிலே சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு மிக சிறந்த வழி.இது உங்கள் உடலை அல்களைஸ் செய்து செரிமானத்திற்கு உதவி செய்கிறது. மேலும் லெமன் ஜூஸ் குடிப்பது உங்கள் உடல் கொழுப்பை கறைக்கவல்லது.   

3.கிவி பழத்தின் நன்மைகள்:

கிவி பழம் ஆன்டி ஆக்சிடண்டுகளால் நிரம்பப்பெற்ற ஒன்று இதில் நிரம்பியுள்ள நார்சத்து உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்கும், நீங்கள் அதிகப்படியான எண்ணெய் மற்றும் வெண்ணெயால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்டு இருப்பீர்களானால் கிவி பழம் உங்கள் உடலை கிளீன் செய்யவல்லது.

4.முட்டைக்கோஸ்:

பல நாடுகளில் முட்டைக்கோஸை புதிய வருடத்தின் லக்கிற்காகவும், செழிப்பிற்காகவும் சாப்பிடுவது உண்மை! இந்த முட்டைக்கோஸ் உங்கள் கல்லீரலை  சுத்தப்படுத்தும் குணம்கொண்டது. மேலும் இதனை உங்கள் தினசரி உணவில் முட்டைக்கோஸ்,ஆப்பிள், வால்நட்ஸ் ஆகியவைகளை சேர்ந்து ஒரு கிறிஸ்பியனா உணவை உண்ணுங்கள்.

5.பீட்ரூட்டின் நன்மைகள்:

நார்ச்சத்தில் சிறந்த பீட்ரூட் உடலில் சேரும் அழுக்குகளை வெளியேற்ற வல்லது குறிப்பாக இது கால் ப்ளாடர்,லிவரில் சேரும் அதிகப்படியான பித்தத்தை வெளியேற்றவும், ஆன்டி ஆக்சிடண்டுகளை உற்பத்தி செய்யவும் வல்லது இந்த பீட்ரூட்டை உங்கள் உணவில்  அதிகம் சேர்த்து ஆரோக்யமாக இருங்க.

6.இஞ்சி,பூண்டின் நன்மைகள்:

இஞ்சி பூண்டு உங்கள் செரிமானத்திற்கு மிகவும் நல்லது,இது உங்கள் உடலில் சேரும் பிரீ ராடிகல்சின் அதிகரிப்பை எதிர்த்து போராடும். உங்கள் தினசரி உணவில் இஞ்சி பூண்டை சேர்த்து செய்யப்படும் சூப் வகைகளை செய்து சாப்பிட்டு ஆரோக்யமாக இருங்கள்.

7.க்ரீன் டீ:

நம்மனைவருக்கு தெரியும் க்ரீன் டீ உடலுக்கு மிகவும் நல்லது, மேலும் இதில் காட்சின் (Catechin) என்படும் இயற்கை ஆன்டி ஆக்சிடன்ட் இருபதால் இது உடலுக்கு அவ்வளவு நன்மை தரும்.இது உங்கள் கல்லீரலின் செயல்பாட்டை அதிகபடுத்தி டீடாக்ஸ் செய்ய உதவும் என்சைம்களை அதிகப்படுத்த உதவுகிறது.

உங்கள் உடலை இயற்கையான வழிமுறைகளில் சுத்தம் செய்து ஆரோக்யமான வாழ்க்கையை வாழுங்கள்!புது ஆண்டிற்குள் ஒரு ஹெல்த்தியான சுத்தமான உடலுடன் பிரவேசியுங்கள்!

ஹாப்பி நியூ இயர் 2020!