இயக்குனர் மித்ரனுடன் கை கோர்க்கும் கார்த்தி! ஐந்தாண்டுகளுக்கு பிறகு கார்த்தி ஜிவி காம்போ!

 

இயக்குனர் மித்ரனுடன் கை கோர்க்கும் கார்த்தி! ஐந்தாண்டுகளுக்கு பிறகு கார்த்தி ஜிவி காம்போ!

கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான கைதி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தம்பி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதையடுத்து கார்த்தி, சுல்தான் என்ற வரலாற்று படத்திலும், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான கைதி படம் மாபெரும் வெற்றி பெற்றது. தம்பி படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. இதையடுத்து கார்த்தி, சுல்தான் என்ற வரலாற்று படத்திலும், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் கதையில் மிகவும் பிரசித்திபெற்ற கதாபாத்திரமான வந்தியத்தேவனாக நடிப்பதாக தகவல்கள் வந்தது. இந்த படத்திற்காக தலை முடியை நீளமாக வளர்த்துள்ளார்.

karthi-09

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ என்ற படத்தை PS மித்ரன் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய இரும்புத்திரை படம் நல்ல வரவேற்பைப்  பெற்றது. இப்போது கார்த்தி, PS மித்ரன் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாகவும், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மித்ரன் படம் என்றாலே அதில் தொழில்நுட்பம் சார்ந்தே கதை இருக்கும். இரும்புத்திரை மற்றும் ஹீரோ படத்தில் இதைப்  பார்த்திருப்போம். இந்த புதிய படத்திலும் அதை எதிர்பார்க்கலாம்.